விஜய் பட தயாரிப்பாளர் வீடு, ஆபீசில் ரெய்டு: வருமான வரித்துறை அதிரடி


திருமலை: தெலுங்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் தில்ராஜூ. இவரது தயாரிப்பில் தமிழில் நடிகர் விஜய் நடித்த ’வாரிசு’, ராம்சரண் நடித்த ‘கேம்சேஞ்சர்’ என்ற படங்களும் வெளியாகியுள்ளது. இதில் கேம் சேஞ்சர் என்ற படத்தை தமிழிலும், தெலுங்கிலும் பிரபல டைரக்டர் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் தெலுங்கில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் நடித்த ‘சங்கராந்திக்கு ஒஸ்தானு’ என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த 2 திரைப்படங்களும் சமீபத்தில் பொங்கல் பண்டிகையன்று ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் வெளியானது. இதில் ‘சங்கராந்திக்கு ஒஸ்தானு’ என்ற திரைப்படத்தின் மூலம் ரூ200 கோடி வசூலானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் தில்ராஜூவின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென வந்தனர். அவர்கள் வீடு, அலுவலகங்களை பூட்டிவிட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தில்ராஜூவின் சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதாரெட்டி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடந்தது. அதேபோல் புஷ்பா-2 திரைப்படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நவீன், தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி, பின்னணி பாடகி சுனிதாவின் கணவர் மேங்கோராம் ஆகியோரது வீடு, அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

The post விஜய் பட தயாரிப்பாளர் வீடு, ஆபீசில் ரெய்டு: வருமான வரித்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: