மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் தகுதிக்கான விதிமுறைகளில் தளர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு


புதுடெல்லி: அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கு தேவையான தகுதிக்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் தளர்த்தியுள்ளது. இது தொடர்பான வரைவை வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களையும் தேசிய மருத்துவ ஆணையம் கோரியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகளில், ‘‘ஒரு முதுகலை பட்டம் பெற்ற, குறைந்தபட்சம் 220 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணிபுரியும் கற்பித்தல் பணி அல்லாத ஆலோசகர்/நிபுணர்/மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் சிறப்பு பிரிவில் உதவி பேராசிரியராக ஆவதற்கு தகுதி பெறுவார்கள். இந்த பதவிக்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர்கள் உயிரி மருத்துவ ஆராய்ச்சி அடிப்படை பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2017ம் ஆண்டு ஜூன் 8ம் தேதிக்கு முன்பு சீனியர் ரெசிடென்ட்களாக நியமிக்கப்பட்ட டிப்ளமோ படித்தவர்கள் உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதி உடையவர்கள். மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தின் அளவுகோல்களின் கீழ் முதுகலை ஆசிரியராக அங்கீகரிக்கப்பட்டு, முதுகலை பயிற்சி திட்டத்தை நடத்தும் அரசு மருத்துவ நிறுவனத்தில் முதுகலை ஆசிரியராக பணியாற்றும்/ பணியாற்றிய மூத்த கன்சல்டென்ட் மூன்று ஆண்டு அனுபவத்தை முடித்தவுடன் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிய தகுதி பெறுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் தகுதிக்கான விதிமுறைகளில் தளர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: