கோவை மாநகர மக்களையே அவமானப்படுத்திவிட்டது பாஜக: நிர்மலா சீதாராமனுக்கு கோவை எம்.பி. கண்டனம்


கோவை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. கணபதி ராஜ்குமார்; பெண் எம்.எல்.ஏ.வை அவமதித்துவிட்டதாக கூறி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார் வானதி.

பெண் என்று கூறி அனுதாபம் பெற முயற்சிப்பதா?. அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை அவமானப்படுத்திய செயல், கோவை மக்களை அவமானப்படுத்தியதுபோல. மதம், ஜாதி அல்லது ஆண், பெண் இவற்றை வைத்து பிரித்தாளுவதே பாஜகவினரின் வேலை. அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மட்டுமல்ல; கோவை மாநகர மக்களையே அவமானப்படுத்திவிட்டது பாஜக என்று கூறினார்.

The post கோவை மாநகர மக்களையே அவமானப்படுத்திவிட்டது பாஜக: நிர்மலா சீதாராமனுக்கு கோவை எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: