லண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

லண்டன்: லண்டனில் குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் கணபதி, முருகன், சிவன், நவகிரகம், வைரவர், விஷ்ணு, ஆஞ்சநேயர் ராமர் சீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர். தமிழக கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வண்ணம் இத்தலத்தில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்களை லண்டன் வாழ் இந்திய மக்கள் எடுத்து நடத்தி வருகின்றனர். இத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 10.00 மணி முதல் 13.00 மணி வரை மற்றும் மாலை 18.00 மணி முதல் 21.00 மணி வரை.

Advertising
Advertising

Related Stories: