பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு

புதுடெல்லி: பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டேவியா ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளார். பாரிசில் நடந்த இத்தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்ததுடன் 18வது இடம் பிடித்து அசத்தியது. இந்திய குழுவினர் நேற்று தாயகம் திரும்பிய நிலையில், ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டேவியாவை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பிரமிப்பூட்டும் வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது.

2016ல் 4 பதக்கங்களை வென்ற இந்தியா, 2020 டோக்கியோ போட்டியில் 19 பதக்கம், தற்போது பாரிசில் 29 பதக்கம் என அசத்தியுள்ளது. அடுத்து 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளுக்கும் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளிப் பதக்கத்துக்கு ரூ.50 லட்சம் மற்றும் வெண்கலத்துக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

The post பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: