* ஐசிசி சரவ்தேச மேம்பாட்டு குழுவில் இடம் பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த முதல் பெண் நடுவர் என்ற பெருமை சலீமா இம்தியாசுக்கு கிடைத்துள்ளது.
* ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
* ‘அவசரம் அவசரமாகக் களத்துக்கு திரும்பி மீண்டும் காயம் அடைவதை விரும்பவில்லை. முழு உடல்தகுதி பெறும் வரை காத்திருப்பேன்’ என்று வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
* கே.எல்.ராகுல் அடுத்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அல் நாசர் அணி தனது முதல் போட்டியில் ஈராக்கை சேர்ந்த அல் ஷார்ட்டா அணியுடன் மோதுகிறது. வைரஸ் தொற்று காரணமாக அவதிப்படும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த போட்டியில் அல் நாசர் அணிக்காக களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதியில் இந்தியா – கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் – சீனா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. 5வது, 6வது இடத்துக்கான மோதலில் மலேசியா – ஜப்பான் களமிறங்குகின்றன. நாளை 3வது, 4வது இடத்துக்கான மோதல் மற்றும் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனல் நடைபெற உள்ளது.
* பிரஸல்ஸ் டைமண்ட் லீக் தடகள போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (87.86 மீ.) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். தங்கம் வென்ற கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்சை (87.87 மீ.) விட நீரஜ் 0.01 மீ. மட்டுமே பின்தங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நீரஜ் இடது கை எலும்பு முறிவையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.