இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தியா சார்பில் யுகராஜ் சிங் கடைசி காலிறுதியில் கோல் அடித்து அசத்தினார். சீனா முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய போதிலும், இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. குறிப்பாக, சீன கோல்கீப்பர் பல கோல்களை தடுத்து சிறப்பாக செயல்பட்டார்.
இந்தியா தனது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை சீனாவிடம் தோல்வியுடன் தொடங்கியது. இன்று இறுதிப்போட்டியில் சீனாவிடம் வென்று சாம்பியன் ஆனது. 2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மலேசியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இம்முறை சீனாவிடம் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இந்தியா 2011, 2016, 2018, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 2012ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2013-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை. 2012 மற்றும் 2013 ஆண்டுகளை தவிர, அனைத்து பதிப்புகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இம்முறை ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் கோப்பையை கைப்பற்றியது.
The post 5வது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்தியது இந்தியா! appeared first on Dinakaran.