சுவரை உடைத்த சூப்பர் சிக்ஸ் சேப்பாக்கத்தில் கோஹ்லி சம்பவம்

சென்னை: வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன், சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் கோஹ்லி உள்ளூர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் பந்து வீச்சில் இமாலய சிக்ஸ் ஒன்றை அடித்தார். அந்த பந்து மைதானத்தின் உட்புறத்தில் இருந்த தற்காலிக சுவரின் மீது மோதி அதை சேதப்படுத்தியது. கோஹ்லியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து விமர்சித்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் சிறந்த நான்கு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை குறிப்பிடுகின்றனர். 2020க்கு முன்பு வரை இந்த நால்வரில் விராட் கோஹ்லி அதிக சதங்கள் அடித்து முன்னிலையில் இருந்தார். ஆனால், தற்போது கோஹ்லியை விட மற்ற மூவரும் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளனர்.

அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்து ஆட உள்ள மூன்று டெஸ்ட் தொடர்களில் கோஹ்லி சிறப்பாக செயல்பட்டு ரன் குவிக்க வேண்டும். அதற்கான முயற்சியாகவே அவர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற வலைப் பயிற்சியின் போது அதிரடியாக சிக்ஸ் அடித்து இருக்கிறார்.

 

The post சுவரை உடைத்த சூப்பர் சிக்ஸ் சேப்பாக்கத்தில் கோஹ்லி சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: