ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்த இத்தொடர் யுஏஇ-க்கு மாற்றப்பட்டு ஷார்ஜா, துபாய் அரங்குகளில் நடக்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் களமிறங்குகின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரை விளம்பரப்படுத்தும் வகையில், துபாய் புர்ஜ் கலீபா கட்டடத்தின் மீது உலக கோப்பையும் அதில் பங்கேற்கும் அணிகளின் பெயர்களும் ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘லேசர் ஷோ’ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்.4ம் தேதி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.
The post மகளிர் டி20 உலக கோப்பை ஒளிரும் புர்ஜ் கலீபா! appeared first on Dinakaran.