அமெரிக்க வாழ் தமிழர் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு: மருத்துவர் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு குறித்து அமெரிக்காவில் 53 ஆண்டுகளாக வசித்து வரும் புகழ்பெற்ற மருத்துவர் சோம இளங்கோவன் வெளியிட்டுள்ள பதிவு: சிகாகோ நிகழ்ச்சிக்கு முதல்வரை வரவேற்க, அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்து தமிழர்கள் திரண்டு வந்தனர். நாங்களும், விழாவிற்கு வந்திருந்த எங்கள் குழந்தைகளும் என்றென்றும் பேசி மகிழும் வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. இதுவரை எனக்கு தெரிந்த 53 ஆண்டுகளில் சிகாகோ விமான நிலையத்தில் இப்படி ஒரு வரவேற்பு நிகழ்ந்ததில்லை.

“உங்கள் குடும்பத்தில் ஒருவர் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கிறார் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்” என்றதும் விண்ணதிர வாழ்த்து அந்த பெரிய அரங்கத்தையே குலுக்கியது. 1971ல் நாங்கள் அளித்த சிறிய வரவேற்பையே அன்புடன் பலமுறை சொன்னவர் கலைஞர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகிழ்ச்சியைச் சொல்லாலும், குழந்தைகளை அன்புடன் தொட்டுப் பேசி மகிழ்ந்த செயலாலும், அனைவருக்கும் அளித்த புன்னகையாலும் தெரிவித்தது வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கும். திராவிட மாடல் உலகறியும் கோட்பாடு ஆகியுள்ளது, தமிழரின் பொற்காலம் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post அமெரிக்க வாழ் தமிழர் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு: மருத்துவர் நெகிழ்ச்சி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: