தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் புதிய சாலை பணிகள்

 

தூத்துக்குடி, செப். 10: தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல பகுதியில் புதிய சாலை அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாரம்தோறும் மண்டல வாரியாக குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி வடக்கு மண்டல பகுதியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் மீளவிட்டான், பாளையாபுரம், சங்கரப்பேரி, ஆதிபராசக்திநகர், மச்சாதுநகர், கேடிசி நகர், ஐயர்விளை, முல்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைப்பது, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜேஷ்கண்ணா, படவரைவாளர் மந்திரமூர்த்தி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் புதிய சாலை பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: