முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் அரசு பள்ளி மாணவர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்பு

 

முத்துப்பேட்டை, செப். 17: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று தந்தை பெரியார் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக அரசின் ஆணைபடி சமூகநீதி உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் முருகேசன் உறுதிமொழியை வசித்தார். இதில் பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாக் கடைப்பிடிப்பேன்.

சுயமரியாதை ஆளுமை திறனும்- பகுத்தறிவு கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம் சகோதரத்துவம் சம தர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன், மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும், சமூகநீதியையேயே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன். என்ற உறுதிமொழியை வாசிக்க ஆசிரியர்கள் உதயா, கருணாநிதி, சீனிவாசன், ஜெயந்தி, காவியா, பிரியா மற்றும் மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர் அதனை தொடர்ந்து தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

The post முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் அரசு பள்ளி மாணவர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: