தஞ்சாவூரில் பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி: தமிழ்பல்கலை மாணவர் முதலிடம்

 

தஞ்சாவூர், செப்.10: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் தமிழ்பல்கலைக்கழக மாணவர் முதல் பரிசு பெற்றார். தஞ்சாவூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நாட்டிற்காகப் பாடுபட்டத் தலைவரான பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 5ம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டிகள் (2024-25) குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

அதில் தமிழ்ப் பல்கலைக்கழக அகராதியியல் துறை முனைவர் பட்ட மாணவர் அருள்பாண்டியன் முதலிடம் வென்று ரூ.5,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன், பதிவாளர் முனைவர்.தியாகராஜன், துறைத்தலைவர் முனைவர் .ஜாக்குலின், மாணவரது நெறியாளர் முனைவர் வீரமணி பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த அருள்பாண்டியனை பாராட்டினர்.

The post தஞ்சாவூரில் பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி: தமிழ்பல்கலை மாணவர் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: