பெரியகுளம் பகுதி சாலைகளில் மின்விளக்கு வசதி கோரி கலெக்டரிடம் மனு

தேனி, செப். 10: பெரியகுளம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தது. தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சேகுவாரா தலைமையில் நிர்வாகிகள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இம்மனுவில் கூறியிருப்பதாவது : பெரியகுளம் சுற்றியுள்ள பகுதிகளில் இருள்சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தேனியில் இருந்து பெரியகுளத்திற்கு வரும் தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட கைலாசப்பட்டியில் இருந்தும், திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளத்தில் இருந்து வரும் எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட பழைய ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்தும் வடுகபட்டியில் இருந்து பெரியகுளத்திற்கு வரும் புறவழிச்சாலையில் இருந்தும் இருள் சூழ்ந்து தொடர்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனைதடுக்கும் விதமாக 100 மீட்டருக்கு ஒரு மின்விளக்கு என்ற அடிப்படையில் அமைக்க வேண்டும் எனவும், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கல்லூரிபிரிவு, டி.கள்ளிப்பட்டி, கைசலாசப்பட்டி, அனுமார்கோயில் ஆகிய பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பெரியகுளம் பகுதி சாலைகளில் மின்விளக்கு வசதி கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: