காரிமங்கலம், செப்.6: காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வீரமணி வரவேற்றார். தாசில்தார் சுகுமார் விழாவில் பங்கேற்று 2023-24ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் மூர்த்தி, பாலாஜி, சேகரன், மதன், திருப்பதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post 100 % தேர்ச்சிக்கு உதவிய ஆசிரியர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.