மேம்பால சுவர்களில் வளரும் மரங்கள் பாலம் சேதமடைய வாய்ப்புள்ளதாக மக்கள் புகார்

 

கோவை, டிச.21: கோவையில் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் ஒன்றாக திருச்சி சாலை உள்ளது. கோவை மாநகரை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் இந்த சாலையில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேம்பாலத்தின் ஏறுதளம் மற்றும் இறங்குதளத்தில் உள்ள பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் வளர்ந்து வருவதால், பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“மேம்பாலத்தின் இரண்டு பக்கவாட்டு சுவர்களிலும் பல இடங்களில் மரங்கள் வளர்ந்து வருகின்றன.

பல மரங்கள் பெரிதாக வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் வேர்கள் ஊடுருவி சென்றால், பாலத்தில் விரிசல் ஏற்படவும், பாலம் சேதமடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மரங்களை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post மேம்பால சுவர்களில் வளரும் மரங்கள் பாலம் சேதமடைய வாய்ப்புள்ளதாக மக்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: