கூடலூர், டிச. 21: தேனி மாவட்டம், 18ம் கால்வாயிலிருந்து 30 நாட்களுக்கு நீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் இன்று முதல் 30 நாட்களுக்கு 255 மில்லியன் கன அடி தண்ணீர் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தேனி மாவட்டம் 18ம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.