கோவை, டிச. 21: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாதம்தோறும் விவசாயிகள் முறையீட்டு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் 2024 மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 27ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கும், அதனைத்தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காலை 10.30 மணிக்கும் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில், விவசாயிகள் நேரடியாக கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண, மனு அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post டிச.27ல் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் appeared first on Dinakaran.