வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

விருதுநகர், டிச.21. விருதுநகரில் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.  விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (43). ராணுவத்தில் பணிபுரிந்து விருப்பு ஓய்வு பெற்றவர். திருணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கோயம்புத்தூரில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விருதுநகர் வந்த கோவிந்தராஜ், குடும்ப பிரச்னை காரணமாக விருதுநகர் கௌசிகா ஆற்றுப் பாலம் அருகே வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருதுநகர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: