விருதுநகரில் ரூ.5.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

 

விருதுநகர், டிச.21: விருதுநகரில் ரூ.5.17 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ சீனிவாசன் அடிக்கல் நாட்டினார். விருதுநகர் பாண்டியன் நகரில் விவேகானந்தர் தெரு, ஓடைப்பட்டி மெயின் ரோடு ஆகியவற்றில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை எம்எல்ஏ சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ.4.67 கோடி மதிப்பில் இருசக்கர வாகன காப்பகத்துடன் கூடிய வணிக வளாகம் அமைப்பதற்கான பூமி பூஜையும், கிழக்கு பாண்டியன் காலனியில் புதியதாக அமைக்கப்பட்ட சுகாதார வளாக திறப்பு விழா எம்எல்ஏ சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் மாதவன், ஆணையாளர் சுகந்தி மற்றும் பொறியாளர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விருதுநகரில் ரூ.5.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: