திருமங்கலம், டிச. 21: மதுரை, திருநகரை சேர்ந்தவர் பகவதி (36). இவர் அரசு போக்குவரத்துக் கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக, பகவதி டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் கட்ராம்பட்டி பிரிவின் அருகே சென்றபோது, செங்கபடையிலிருந்து திருமங்கலம் வந்த மினி வேன் அவரது டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார், உயிரிழந்த டிரைவர் பகவதி உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மினி வேன் டிரைவரான திருமங்கலம் மேல உரப்பனூரை சேர்ந்த சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமங்கலம் அருகே டூவீலர் மீது வேன் மோதி அரசு பஸ் டிரைவர் பலி appeared first on Dinakaran.