சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிலோன் சாலை ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழா என 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. பக்தி முக்தி பாவனோற்சவம், தைலாப்பயங்கம், கைலாச வாகனத் திருவிழா, வேட்டைத் திருவிழா, தேர் திருவிழா, சண்டேஸ்வரர் உற்சவம், பூந்தண்டிகை, பஞ்ச முகார்ச்சனை, பால் குட பவனி, வைரவர் மடை என பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். சர்வ அலங்கார நாயகர்களாக விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் தீர்த்தமாடியதும் வசந்த மண்டபத் திருவூஞ்சல் காட்சியும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. விழா நடைபெற்ற 10 நாட்களிலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: