கேலோ இந்தியா சைக்கிள் போட்டியில் தமிழ்நாடு வெற்றி

 

திருப்போரூர். செப்.2: கேலோ இந்தியா அமைப்பின் தென் மண்டல பிரிவின் சார்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அந்தமான் ஆகிய 6 மாநிலங்களுக்கு இடையே பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் சென்னை அடுத்த திருப்போரூரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் முதல் நாளில் நடந்த போட்டிகளில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 120 பெண்கள் கலந்து கொண்டனர். அதேபோன்று உள்ளூர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போட்டியும் நடத்தப்பட்டது.

நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற போட்டி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதல் இடத்தை தமிழ்நாடு வென்றது. முன்னதாக இந்த போட்டிகளை சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் இணை இயக்குனர் ஸ்வேதா விஸ்வநாதன், தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சங்க தலைவர் சுதாகர், செயலாளர் விக்னேஸ்வரன், பொருளாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

The post கேலோ இந்தியா சைக்கிள் போட்டியில் தமிழ்நாடு வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: