இந்த மருத்துவமனையில் அடையாறு ஆனந்த பவன் குழுமம் இணைந்து இதய நோயால் பாதித்த 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 10 சிறுவர், சிறுமிகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை ெசய்யப்பட உள்ளது. அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் அடையாறு ஆனந்த பவன் குழுமம் ஏற்றுக்கொள்கிறது. இந்த வாய்ப்பை பெற விரும்பும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இதய நோயால் பாதித்த சிறுவர்கள் உரிய ஆவணங்களுடன் நறுவீ மருத்துவமனையை அணுகவேண்டும்.
பாதிப்புக்கு உட்பட்ட சிறுவர்களை இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் விநாயக் சுக்லா தலைமையில், டாக்டர் ரே.ஜார்ஜ், டாக்டர் ஈஸ்வர கார்த்திக், டாக்டர் ஜாபர் ஆகியோர் கொண்ட குழுவினர் பரிசோதித்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பர். இந்த வாய்ப்பை பெறுவதற்கு நறுவீ மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பால் செல்வம், தொலைபேசி எண்: 8754047796 தொடர்புகொண்டு விவரங்களை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடையாறு ஆனந்தபவன் குழும நிர்வாக இயக்குனர் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா கூறுகையில், ‘எங்கள் பயணம் உணவுத்துறையில் தொடங்கி 15 ஆயிரம் பணியாளர்களுடன் பயணிக்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வது, சென்னை மற்றும் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி வரையில் உதவிகள் செய்துள்ளோம். 3 இடங்களில் 3 வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ளதை விட நறுவீ மருத்துவமனை சிகிச்சை சிறப்பாக உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத்தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்த் நாயர், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப்ஜோஸ், பொதுமேலாளர் நிதின் சம்பத், அபிராமி நிதின் ஆகியோர் பங்கேற்றனர்.
The post வேலூர் நவீன மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை: அடையாறு ஆனந்த பவன் குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு appeared first on Dinakaran.