சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேட் இன் இந்தியா பிக்சல் 8 போன் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவது உள்பட மேம்பட்ட உற்பத்தியில் கூகுளுடன் கூட்டிணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு ஏஐ ஆய்வகங்களின் கீழ் உள்ள முக்கிய செயற்கை நுண்ணறிவு முயற்சிகளை ஆராயும். கூகுள் உடனான எங்களின் கூட்டாண்மை, தமிழ்நாட்டை ஒரு ஆக்கப்பூர்வமான ஏஐ மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக நிறுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடு ஆகும்.
நாம் தொழில்நுட்பத்தை மட்டும் பின்பற்றவில்லை, எதிர்காலத்தில் நமது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல அதன் சக்தியைப் பயன்படுத்துகிறோம். முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், தமிழக இளைஞர்களை எதிர்காலத்தில் தயார்படுத்தும் ஏஐ திறன்கள் கொண்டிருப்பதையும், ஸ்டார்ட் அப்கள், இயக்கம், சுகாதாரம் மற்றும் பிற நடைமுறை சவால்கள் போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
2 மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக அதிநவீன AI திறன்களை கொண்டு அவர்களை தயார்படுத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூகுள் உடனான முயற்சிகளைக் காண எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post அதிநவீன ‘ஏஐ’ திறன்களை கொண்டு 2 மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.