லண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா

லண்டன்: லண்டனில் எப்சம் என்ற பகுதியில் ஸ்டோன்லே என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் கடந்த 3ம் தேதி தேரோட்டம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சர்வலோக நாயகியான அன்னை ராஜராஜேஸ்வரி தேரில் பவனி வந்தார். இந்த விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே மோர், நன்னாரி, சர்பத், உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த திருத்தலத்தில் முக்கிய மூலவராக ராஜராஜேஸ்வரி அம்மன் அருள் பாலிக்கிறார். மேலும் விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், ரங்கநாதபெருமாள், துர்கை, நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.

Related Stories: