துபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி புதிய உலக சாதனை படைத்த தமிழ் தொகுப்பாளர்கள்

துபாய்:  துபாயில் செயல்படும் ரேடியோ கில்லி 106.5 எப் எம் தமிழ் தொகுப்பாளர்கள் புதிய உலக சாதனை படைத்தனர். இதன் தொகுப்பாளர்கள் நிவி மற்றும் பிரதீப் தொடர்ந்து (106 மணி 50 நிமிட‌ நேரம்) 4 நாட்களுக்கு மேல்  ரேடியோ கில்லி 106.5 எப் எம்மில் நிகழ்ச்சிகளை இடைவிடாமல் தொகுத்து வழங்கி உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.கின்னஸ் சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது.  

தொகுப்பாளர்கள் நிவி மற்றும் பிரதீப் கூறியதாவது.. இது ஒட்டுமொத்த தமிழ் உள்ளங்களுக்கும் கிடைத்த வெற்றி அனைவரும் தந்த அன்பான ஆதரவு,உற்சாகாத்தினால்தான் இந்த சாதனையை அடைய முடிந்தது உலகம் முழுவதும் உள்ள தமிழ் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தனர்.

Related Stories: