பலகோடி ரூபாய் முறைகேடு புகார் எதிரொலி ஆந்திரா மாஜி அமைச்சர் நடிகை ரோஜா விரைவில் கைது? முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் தனது பதவிக்காலத்தில் `ஆடுதாம் ஆந்திரா’ (விளையாடுவோம் ஆந்திரா) என்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கினார். இதில் பல கோடி ரூபாய் மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் தேசிய கபடி வீரர் பிரசாத் என்பவர் கடந்த 7ம்தேதி புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் விரைந்து விசாரிக்க ஆந்திர சிஐடி கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உயரதிகாரிகள் நேற்றுமுன்தினம் முதல் நடிகை ரோஜா மற்றும் துணை முதல்வர் கிருஷ்ணதாஸிடம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் முன்னாள் துணை முதல்வர் கிருஷ்ணதாஸ், நடிகை ரோஜா ஆகிய இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பலகோடி ரூபாய் முறைகேடு புகார் எதிரொலி ஆந்திரா மாஜி அமைச்சர் நடிகை ரோஜா விரைவில் கைது? முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: