மொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி

மொரிஷியஸ்: மொரிஷியஸ் நாட்டில் சித்ரா பவுர்ணமியன்று கத்தற போர்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மலை மீது அமைந்திருக்கும் சிவசுப்பிரமணிய திருக்கோயில் உட்பட அனைத்து கோவில்களில், முருக பெருமானுக்கு காவடி விழா எடுத்து தமிழர்கள் கொண்டாடினர். இந்த திருக்கோயில் ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாகும், 108 படிகளையும், யானை பாதையும் கொண்ட மலை கோயிலாகும். சித்ரா பவுர்ணமியன்று காலை முதல் கோவிலின் மலை அடிவாரத்தில் காவடி சுமந்தும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்கு ஆங்காங்கே பானகங்கள் மற்றும் அன்னதானங்களுக்கு கோவில் நிர்வாகமும், பல தொண்டு நிறுவனங்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: