கிருஷ்ணகிரி, ஆக.13: கிருஷ்ணகிரியில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி(வெள்ளிக்கிழமை), காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ், விந்தியா இன்போடெக் போன்ற முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த முகாம், முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இம்முகாமின் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு பெறுபவரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.