அப்போது, குன்றத்தூரை சேர்ந்த அமுதா (42) என்ற பெண் பக்தரும் வேண்டுதலை நிறைவேற்ற தீ குண்டத்தில் இறங்கினார். தீக்குண்டத்தில் நடந்து சென்ற அவர் திடீரென கால் இடறி விழுந்ததில் வலது கால் மற்றும் கைப்பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஆலய உறுப்பினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். வேம்புலி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழா ஏற்பாட்டை ஆலய அறங்காவல் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பெரம்பூர்: கொளத்தூர் பள்ளி சாலை பகுதியில் ஸ்ரீதேவி கங்கை அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிலையில் கொளத்தூர் வடக்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்த வேலு (45) என்ற நபர் தீ மிதித்த போது கால் தவறி நெருப்பில் விழுந்தார். இதில் இடது பக்கம் மார்பு மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post அம்மன் கோயில் தீமிதி திருவிழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த இரண்டு பக்தர்கள் படுகாயம் appeared first on Dinakaran.