கிருஷ்ணகிரி, ஆக.12: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தில் வனக்காளி அம்மன் கோயில் 4ம் ஆண்டு ஆடி பெருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி அருகேயுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள, வனக்காளி அம்மன் கோயில் 4ம் ஆண்டு ஆடி பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு, கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், காப்பு கட்டுதல், கொடி ஏற்றுதல் மற்றும் அம்மனுக்கு மாலை போடுதல் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பகல் 12 மணிக்கு, கங்கையில் கரகம் அலங்காரம் செய்து அம்மன் உற்சவ சுவாமியுடன், தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்கள் காளி, அம்மன் வேடம் அணிந்தும், தீச்சட்டி எடுத்தும், கரகம் சுமந்தும் வந்தனர். சுவாமி நகர் வலம், கிட்டம்பட்டி மேம்பாலம் வரை சென்று பின்னர் கோயில் வளாகத்திற்கு திரும்பியது. அங்கு பகல் 1 மணிக்கு, தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை அகசிப்பள்ளி பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post வனக்காளி அம்மன் கோயில் விழா appeared first on Dinakaran.