பவித்திரம் அங்கன்வாடி மையத்தில் உணவின் தரத்தை சாப்பிட்டு ருசி பார்த்த கலெக்டர்

*சமையல் கூடத்தையும் பார்த்தார்

*சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தல்

கரூர் : க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் அங்கன்வாடி மையத்திலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து சமையல் பொருட்கள் மற்றும் சமையல் கூடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். சமையல் கூடங்களை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டாரம் விஸ்வநாதபுரி, நெங்கூர், காருடையம்பாளையம், பவித்திரம், புன்னம் ஆகிய ஊராட்சிகளுக்கு பாலமலை சாஸ்தா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் ஜூலை 11ம்தேதி முதல் ஆகஸ்ட் 8ம்தேதி வரை 46 இடங்களில் 10 மணி முதல் மதியம் 3 மணி வரை முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டார ஊரக பகுதிகளில் 9 நாட்களில் மொத்தம் 46 இடங்களில் 37 பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து, மீதமுள்ள 9 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று க.பரமத்தி வட்டாரத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரி, நெடுங்கூர், காருடையம்பாளைமய், பவித்திரம், புன்னம் ஆகிய ஊராட்சிகளுக்கு பாலமலை சாஸ்தா மஹாலிலும், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட மாவத்தூர், செம்பியநத்தம் ஆகிய ஊராட்சிகளுக்கு கோடங்கிப்பட்டி சமூதாயக் கூடத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்குட்பட்ட பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு பாலராஜபுரம் சுவாதி மண்டபத்திலும், தோகைமலை வட்டாரத்திற்குட்பட்ட சின்னியம்பாளையம், கழுகூர் ஆகிய ஊராட்சிகளுக்கு ஏ.உடையாபட்டி பிஎல்எப் கட்டிடத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் தங்கவேல், க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் அங்கன்வாடி மையத்திலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து சமையல் பொருட்கள் மற்றும் சமையல் கூடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, தாசில்தார் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பவித்திரம் அங்கன்வாடி மையத்தில் உணவின் தரத்தை சாப்பிட்டு ருசி பார்த்த கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: