தமிழ்நாட்டில்தான் அதிக இதய மாற்று அறுவை சிகிச்சை

டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் 70 இதய மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 35, மராட்டியம் 33, குஜராத்தில் 29, தெலுங்கானாவில் 15 நடைபெற்றுள்ளன.

The post தமிழ்நாட்டில்தான் அதிக இதய மாற்று அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: