நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை அடுத்து மாநகராட்சி மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு..!!

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால், நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் (ஆகஸ்ட்.5) இன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார். இந்த சூழலில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணனை எதிர்த்து திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இதில் அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். நெல்லை மாநகராட்சி 25வது வார்டு உறுப்பினராக ராமகிருஷ்ணன் உள்ளார். இதையடுத்து நெல்லை மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

The post நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை அடுத்து மாநகராட்சி மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: