துபாயில் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

துபாய். துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் யுஏஇல் பணியாற்றும் தமிழர்களுக்கு இந்தியாவில் உள்ள கல்வி திட்ட உயர் கல்வி குறித்து வழிகாட்டுதல் முகாம் துபாயில்  நடைபெற்றது.ஏராளமான தமிழர்கள்  பங்கேற்று பயன்பெற்றனர்.

Advertising
Advertising

நிகழ்ச்சியின் போது இந்தியாவில் உயர் கல்வி கற்பது  மற்றும் கல்விக்கான அரசு சலுகைகள் குறித்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது

இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ரபீக்  கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினார். விருந்தினராக பேராசிரியர் சேமுமு முகம்மது அலி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபிபுல்லாஹ் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். ராபியா குமாரன் தொகுத்து வழங்கினார் சென்னை கிரஸ்ன்ட் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி எஸ் எம் புஹாரி, கல்வியாளர் கலந்தர், தனியார் நிறுவன பைனாண்ஸ் இயக்குநர் முஹைதீன்,பொறியாளர் அன்வர் பாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஈமான் கல்விக்குழு செயலாளர் பைசுர் ரஹ்மான்,இணை செயலாளர் ஜாபர், மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லா விழாகுழு செயலாளர் ஜமால் முஹைதீன்,இணை செயலாளர் நஜீம் மரிக்கா, அட்மின் செயலாளர் காதர், இணை செயலாளர் யாகூப், செயற்குழு உறுப்பினர் முஸ்தபா நூராணி, சேக்ஹிதாயத்துல்லா, பாஷா,ஹிதாயத்துல்லா,உஸ்மான்,நிஜாம்,அசார் மற்றும் பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் நன்றியுரை கூறினார்

Related Stories: