வயநாடு நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகி போன படத்தை வெளியிட்டது இஸ்ரோ

பெங்களூரு : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகிப் போன படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கார்ட்டோசாட்-3 என்ற இஸ்ரோவின் தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் வயநாடு சேதங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. முண்டகையில் தொடங்கி இருவைப்புழா ஆறு வரை 8 கி.மீ. தூரத்துக்கு நிலம் | சரிந்து மழை, வெள்ளத்தோடு கலந்து ஓடிய தடத்தின் படமும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post வயநாடு நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகி போன படத்தை வெளியிட்டது இஸ்ரோ appeared first on Dinakaran.

Related Stories: