இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடித்தில் அவர் குறிப்பிடுகையில் ஆர் ஜி கர் மருத்துவமனையில் நடந்த பயங்கரமான சம்பவத்தை தொடர்ந்து ஒரு மாதம் வரைபொறுமையாக இருந்தேன். இப்போது அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் தாமதமானதாகும்.அரசு துறைகளில் உள்ள லஞ்சம் குறித்து மாநில அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. கட்சியில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
இந்த விவகாரங்களால், எம்பி பதவி மற்றும் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். முதல்வர் மம்தாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ராஜினாமா செய்ய முடிவு மம்தாவுக்கு எதிராக திரிணாமுல் எம்.பி போர்க்கொடி appeared first on Dinakaran.