அபுதாபி இளவரசர் இந்தியா வருகை

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபி பட்டத்து இளவரசருமான ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் முதல் முறையாக 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்றார்.

இந்த பயணத்தில் பட்டத்து இளவரசர் நஹ்யான் எரிசக்தி, இணைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். டெல்லியில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு தரப்பு உறவு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து மும்பை செல்லும் நஹ்யான் பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.

The post அபுதாபி இளவரசர் இந்தியா வருகை appeared first on Dinakaran.

Related Stories: