ஒரே மாதத்தில் 2 எம்பிக்கள் ராஜினாமா கட்சியில் சுய பரிசோதனை தேவை: மூத்த பிஜேடி தலைவர் வலியுறுத்தல்

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை முதல்வராக இருந்தவர் நவீன் பட்நாயக். மக்களவை தேர்தலுடன்,மாநில சட்ட பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில்,மாநிலத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சியை பிடித்தது. 24 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சி தோல்வியடைந்தது. பிஜேடி கட்சியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக மக்களவையில் கட்சிக்கு இப்போது பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கட்சிக்கு மொத்தம் 9 எம்பிக்கள் இருந்தனர். அதில்,மம்தா மொகந்தா,சுஜித் குமார் தாஸ் ஆகிய 2 எம்பிக்கள் சமீபத்தில் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு பாஜவில் சேர்ந்துள்ளனர். மம்தா மொகந்தா கூறுகையில்,‘‘பிஜேடி கட்சியில் கட்சி தலைமைக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் மேலும் பல கட்சி தலைவர்கள் பாஜவுக்கு வருவார்கள்’’ என்றார்.

இதுகுறித்து மூத்த பிஜேடி தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமர் சத்பதி கூறுகையில்,‘‘கட்சியின் சாதாரண உறுப்பினர் ராஜினாமா செய்தால் அதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒரு எம்பி ராஜினாமா செய்தால் அது நிலைமையை மாற்றிவிடுகிறது. எனவே,கட்சியில் சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post ஒரே மாதத்தில் 2 எம்பிக்கள் ராஜினாமா கட்சியில் சுய பரிசோதனை தேவை: மூத்த பிஜேடி தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: