புதுடெல்லி: யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அதுகுறித்த கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் குடியரசு மாளிகை தரப்பில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ‘‘மனோஜ் சோனியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும், மேலும் யுபிஎஸ்சியின் உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தி சுதன் யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரீத்தி சுதன் இன்று முதல் பொறுப்பேற்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் ஆந்திரா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான பிரீத்தி சுதன் இதற்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளராக பணியாற்றியுள்ளார்.
The post மனோஜ் சோனி ராஜினாமா ஏற்பு யுபிஎஸ்சி புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் appeared first on Dinakaran.