ஆந்திரா, பீகாருக்கான நிதி ஒதுக்கீடு வீழ்ச்சியடைந்த வங்கியின் பின்தேதியிட்ட காசோலை: காங். விமர்சனம்

புதுடெல்லி: ஆந்திரா, பீகாருக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதியானது வீழ்ச்சியடைந்த வங்கியின் பின்தேதியிட்ட காசோலையை போன்றது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் மற்றும் பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ஆந்திரா மற்றும் பீகாருக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள சிறப்பு நிதி தொகுப்பானது வீழ்ச்சியடைந்துவரும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை போன்றது.

பிரதமர் மோடி இரண்டு மாநிலங்களுக்கும் நிச்சயமில்லாத வாக்குறுதியை அளித்துள்ளார். குறிப்பிட்ட திட்டங்களுக்காக பீகாருக்கு ரூ.58.900கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் போலவரம் திட்டத்திற்கு மட்டும் முதல் கட்டமாக ரூ.14ஆயிரம் கோடியையும் ஏற்க அரசு உறுதி பூண்டுள்ளது. தெளிவான ஒதுக்கீடுகள் இல்லாமல் இன்னும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள மொத்த நிதிக்கான ஒதுக்கீடானது லட்சக்கணக்கான கோடிகளாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஆந்திரா, பீகாருக்கான நிதி ஒதுக்கீடு வீழ்ச்சியடைந்த வங்கியின் பின்தேதியிட்ட காசோலை: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: