ஜனவரி 16, 2016 அன்று தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி, மருந்துத் துறை உட்பட பல்வேறு தொழில்களில் புதுமைகளை வளர்ப்பது மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியில் மூன்று முதன்மைத் திட்டங்கள் அடங்கும், அவையாவன: ஸ்டார்ட் அப்களுக்கான நிதி ஸ்டார்ட்அப் இந்தியா மூலதன நிதி திட்டம் ஸ்டார்ட்அப்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்.
மருந்துப் பொருட்கள் துறை, மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
30 ஜூன் 2024 நிலவரப்படி, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை மொத்தம் 1,40,803 நிறுவனங்களை ஸ்டார்ட்அப்களாக அங்கீகரித்துள்ளது, அவற்றில் 2,127 மருந்துத் துறையைச் சேர்ந்தவை. கடந்த மூன்று ஆண்டுகளில், மருந்துத் துறையில் 1397, அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் அமைக்கப்பட்டன.
ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியின் கீழ், ஸ்டார்ட் அப்களுக்கான நிதியம் (FFS) என்ற முதன்மைத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்டார்ட்அப் இந்தியா மூலதன நிதி திட்டம், ஸ்டார்ட் அப்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் கீழ், அனைத்து துறைகள் மற்றும் தொழில்களில் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கு அவற்றின் வணிக சுழற்சியின் பல்வேறு கட்டங்களில் ஆதரவு நீட்டிக்கப்படுகிறது.
30 ஜூன் 2024 நிலவரப்படி, மூலதன நிதித்திட்டத்தின் நிதியின் நிதித்திட்டம் எஃப்எஃப் எஸ் 205 இன்குபேட்டர்களுக்கு ரூ.862.84 கோடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. துணிகர மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இது இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் செயல்படுத்தப்படுகிறது. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதிகளுக்கு சிட்பி மூலதனத்தை வழங்குகிறது.
அவை தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. 30 ஜூன் 2024 நிலவரப்படி, எஃப்எஃப் எஸ் கீழ், 138 நிறுவனங்களுக்கு ரூ.10,804.7 கோடி உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் மருந்துத் துறையின் கீழ் 214 புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 176 தொழிற்சாலைகள் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பிலும், 38 தொழிற்சாலைகள் மருந்துகள் மற்றும் மருந்து தயாரிப்பிலும் உள்ளன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
The post மருந்துத் துறைகளில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது: ஒன்றிய அமைச்சர் ஜேபி.நட்டா appeared first on Dinakaran.