இமாச்சலில் பறந்த பாக். கொடி போட்ட விமான வடிவ பலூன்கள்

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் பாகிஸ்தான் நாட்டின் கொடியுடன் கூடிய விமான வடிவ பலூன்கள் பறக்கும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பாகிஸ்தானின் சர்வதேச ஏர்லைன்ஸ் சின்னம் அல்லது பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட விமான வடிவ பலூன்கள் பறந்தது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பலூன்களின் மூலத்தை கண்டறிவதற்காக இமாச்சலப்பிரதேச காவல்துறை அதிகாரிகள் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள போலீசாருடன் தொடர்பில் உள்ளனர். இது தொடர்பாக இந்திய விமானப் படை அதிகாரிகளையும் இமாச்சலப்பிரதேச காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். இதுவரை இந்த பலூன்களுக்குள் கண்காணிப்பு சாதனங்கள், டிராக்கர்கள் அல்லது பொருட்கள் போன்ற சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Related Stories: