வெண்ணிலா கபடி குழு பட பாணியில் 32 பரோட்டா சாப்பிட்டால் பணம் தர வேண்டாம்: ஓட்டல் பேனர் வைரல்

உடன்குடி: வெண்ணிலா கபடி குழு சினிமா பட பாணியில், ‘நீங்க வேணுனா பந்தயத்துக்கு வர்றீங்களா’ என பரோட்டா சாப்பிடும் போட்டி பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய உலகில் தொழில் போட்டிகள் அதிகமாக உள்ளன. அதனால் தங்களது தொழிலை தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக தங்கள் நிறுவனம் மக்களிடம் உடனடியாக கவனம் ஈர்க்க வேண்டும் என்பதில் குறியாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடிகர் சூரி பரோட்டோ சாப்பிடும் போட்டி எல்லோரும் ரசிக்கும் படி இருக்கும்.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பரோட்டா கடை விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் சூரி பரோட்டா கடையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற படத்தை வைத்து, ‘நீங்க வேணுனா பந்தயத்துக்கு வர்றீங்களா’ என்றழைக்கும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 32 பரோட்டா சாப்பிட்டால் பணம் தர வேண்டாம், டோர் டெலிவரியும் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post வெண்ணிலா கபடி குழு பட பாணியில் 32 பரோட்டா சாப்பிட்டால் பணம் தர வேண்டாம்: ஓட்டல் பேனர் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: