‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு அண்ணாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காரணமாக அண்ணாநகரில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி நரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாநகர் 2வது நிழற்சாலையில் நாளை ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 2வது நிழற்சாலையில் புளூஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை மற்றும் 3வது பிரதான சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:
* திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளூ ஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் இடதுபுறம் திரும்பி, 6வது நிழற்சாலை, ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி, ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.
* திருமங்கலத்தில் இருந்து அமைந்தகரை, ஈவெரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளூ ஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும்.
* அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3வது பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் செல்ல வேண்டும்.
* புளூ ஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் இருந்து (ஜெஸ்சி மோசஸ் பள்ளி மார்க்கத்திலிருந்து) 2வது நிழற்சாலைக்கு (அண்ணாநகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து, 5வது நிழற்சாலையில் நேராக சென்று 4வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு அண்ணாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: