லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா

ஆப்ரிக்கா: லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டதுடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. இதையடுத்து புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பால் குடம் மற்றும் காவடி எடுக்கும் அனைவருக்கும் கோவில் நேரத்தில் காப்பு கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் கடந்த 30ம் தேதி காலை 9 மணிக்கு 108 பால்குடங்கள் மற்றும் காவடி எடுக்கும் வைபவம் சிறப்பாக நடந்தது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கந்தனின் அருளை பெற்றனர்.

Related Stories: