ரூ.52.91 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

 

கிருஷ்ணகிரி, ஜூலை 22: காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் ராமநாதன் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. சுப்பிரமணியபுரத்தில் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 95 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி நடைறெ உள்ளது. இதேபோல தேர்பட்டியில் ரூ.22 லட்சத்து 90 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதேபோல காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் சாப்பர்த்தி, புங்கம்பட்டி, வேட்ராயன் கொட்டாய் பகுதிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை விழாவில் மதியழகன் எம்எல்ஏ., கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ரூ.52.91 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: