மாயமானவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு மனுதாரர் முகாம்

 

பெரம்பலூர், ஜூலை 20: வாலிகண்டபுரத்தில் மங்களமேடு உட்கோட்டத் திற்குட்பட்ட காவல்சரகப் பகுதிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு மனுதாரர் முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டஎஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தர வின்பேரில் மங்களமேடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட மங்களமேடு, குன்னம், வி. களத்தூர், கை.களத்தூர் காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு மனுதாரர் முகாம் மங்களமேடு காவல் நிலையசரகம், வாலிகண்ட புரத்தில் உள்ள தனியார் திருமணமஹாலில் கடந்த (18ம் தேதி) காலை 10மணி முதல் பகல் 1மணிவரை நடைபெற்றது. இந்த சிறப்பு மனுதாரர் முகாமிற்கு மங்களமேடு உட்கோட்ட டிஎஸ்பி தனசேகரன் தலைமை வகித்தார்.

இதில் 26 மனுதாரர்கள் கலந்து கொண்ட னர். மூன்று வழக்குகளில் காணாமல் போன நபர்கள் நடந்த சிறப்பு மனு முகாமில் கண்டுபிடிக்கப் பட்டனர். இன்னும் 12 வழக் குகள் கண்டுபிடிக்கப்பட வேண்டி உள்ளது. மேலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்ட 11 வழக்குகள் தீர்வுக் காக நீதிமன்றம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்புமனு முகாமில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் வி.களத்தூர் கை.களத்தூர் காவல் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் கள் கலந்து கொண்டனர்.

The post மாயமானவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு மனுதாரர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: