ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்பி வீட்டை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் கட்சியினர்

*கல் வீசி தாக்குதலில் கார் கண்ணாடி உடைப்பு

திருமலை : ஆந்திர மாநிலம் சித்தூர் மக்களவைத் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ரெட்டப்பாவை புங்கனூரில் உள்ள அவரது வீட்டில் பார்க்க ராஜம்பேட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி மிதுன் ரெட்டி நேற்று சென்றார். அப்போது திடீரென முன்னாள் எம்பி ரெட்டப்பாவின் வீட்டை தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது இருகட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி கொண்டனர். இதில் பலர் காயமடைந்த நிலையில் முன்னாள் எம்பி ரெட்டப்பா கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கலவரத்தை தடுக்க முயன்றனர். மேலும் பதற்றமான சூழ்நிலையில் போலீசார் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருகட்சியினரிடை ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கல் வீசி தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் எம்பியுடன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் எரிக்கப்பட்டது. இதனையடுத்து கூடுதல் எஸ்பி வாகனத்தில் எம்பி மிதுன் ரெட்டி பாதுகாப்பாக திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனிதா நிருபர்களிடம் பேசுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிக நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர்.

எனவே தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் எவ்வளவு பகை இருந்தாலும் சட்டபூர்வமாக கையாள வேண்டும். வன்முறையை கையாள வேண்டாம். வன்முறையை தொடர்ந்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். வன்முறையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்பி வீட்டை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் appeared first on Dinakaran.

Related Stories: